Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு. தொடர்பு கொள்ள வேண்டிய எண் ….

0

'- Advertisement -

தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் சீனியர் பிரிவினர்கான 72வது சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவம்பர் 28ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

 

இந்த போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு திருச்சி உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் வரும் 15ம் தேதி காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.

 

ஆண்கள் எடை அளவு 85 கிலோவுக்குக் கீழ், பெண்கள் எடை அளவு 75 கிலோவுக்குக் கீழ் இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை சார்ந்த வீரர், வீராங்கனைகள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள், தேர்வுக்கு வரும் போது ஆதார் கார்டு நகல் அவசியம் கொண்டு வரவேண்டும்.

 

தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர், நீலகண்டன், செயலாளர் வெங்கடசுப்பு 9443445932, 9524676767, ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.