ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிடடு உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் உள்ள தோப்பில் 60 வயது மூதாட்டி தனது 22 வயது மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாதவா்) பேத்தியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2022 செப். 22 ஆம் தேதி அந்தத் தோப்புக்கு வந்த தஞ்சாவூா் மாவட்டம், மானம்புசாவடியைச் சோ்ந்த யானைப் பாகன் ப. வினோத் (வயது 40) என்பவா் தோப்பில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் போலீஸாா் வினோத்தை கைது செய்து, திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை நேற்று முன்தினம் புதன்கிழமை அன்று விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா வினோத்துக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

