வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சம்பாதித்து வரும் திருச்சி டவுன் ஹால் சார்- பதிவாளர் கணேசனுக்கு துணையாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரி ?
திருச்சி டவுன்ஹால் சார்பதிவாளர், தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
திருச்சி, தெப்பக்குளம் பகுதியை மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன் (வயது 61).
இவர் திருச்சி ஒன்றாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
இவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
“எனது தந்தை ஜெயராமன், கடந்த 1999ம் ஆண்டு இறந்து விட்டார். ஜெயராமனுக்கு, திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட (தற்போது தில்லைநகர் சார் பதிவாளர்) பகுதியில் 2.44 சென்ட் இடம் மற்றும் 0.36 1/2 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி சொத்து ஆரம்பத்தில் எங்கள் பாட்டனார் ஆறுமுகம் பிள்ளை கடந்த 24.02.1920ம் தேதியில் அப்துல் ரஹீம் சாயபு என்பவரிடமிருந்து பதிவு பெற்ற கிரையம் மூலம் (ஆவண எண் 1110/1920) அனுபவித்து வந்துள்ளார். ஆறுமுகம் பிள்ளை சொத்தினை பொறுத்து எந்த விதமான ஆவணமும் எழுதி வைக்காமல் இறந்துவிட்ட நிலையில், மேற்படி சொத்து மற்றும் இதர சொத்துக்களை அவரது ஒரே மகனான கோவிந்தசாமி பிள்ளையும், அவரது மகன்களான ராமமூர்த்தி மற்றும் ஜெயராமன் ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த 27.09.1964ம் தேதியில் பதிவு பெற்ற பாகப்பிரிவினை (ஆவண எண்.2971/1964) செய்துள்ளார்கள்.
அதன்படி, ஜெயராமனுக்கு சி செட்யூலில் ஐட்டம் 1 மற்றும் 4 சொத்தாக கிடைக்கப்பெற்றது. அவர் காலமான பிறகு வாரிசு அடிப்படையில் எங்களுக்கு இச்சொத்து கிடைத்த அனுபவத்தில் இருந்து வருகின்றது. கடந்த 2002ம் வருடம் மேற்படி சர்வே எண்ணில் ஏக்கர் 1.58 சென்ட் இடத்தை சுமார் 20 பிளாட்டுகளாக பிரித்து பல நபர்களுக்கு பதிவு கிரயம் செய்து கொடுத்துள்ளோம்.
மீதம் இருந்த 0.85 1/2 சென்ட் நிலத்தில் பெரிய காம்பவுண்ட் சுவர் கட்டி அதில் கடந்த 3 வருடமாக தனியார் பஸ்களை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வாடகைக்கு விட்டுள்ளோம். இந்நிலையில் எங்களுடைய வேறு ஒரு சொத்தினை அடமானம் வைப்பதற்காக திருச்சி மூன்றாம் இணை சார்பதிவாளர் அலுவலகம் சென்று அடமான பத்திரம் பதிவு செய்தபோது, மேற்படி ஆவணத்தினை சார்பதிவாளர் பதிவு செய்யாமல் வேண்டுமென்றே சொத்து குறித்து எந்த விதமான வில்லங்கமும் இல்லாத நிலையில் அதனை நிறுத்தி வைத்து, மேற்படி சொத்தில் பிரச்சனை உள்ளதாக கூறினார்.
இதனால், எங்களுடைய அனைத்து சொத்துகள் குறித்தும் வில்லங்கச் சான்று ஆன்லைனில் பார்வையிட்டபோது எங்களது இந்த சொத்தினை சுரேஷ்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி என்பவருக்கு குத்தகை உரிமம் மாற்றம் செய்திருந்தது போல பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேற்படி ஆவணத்தின் நகலை எடுத்து பார்க்கும்போது
கடந்த 1991ம் ஆண்டு முதல் சுரேஷ்குமாரை எங்களது தகப்பனார் ஜெயராமன் குத்தகைதாரராக வாய்மொழியாக நியமனம் செய்து,
அன்று முதல் அவர் மேற்படி நிலத்தில் உழவு பணி செய்து டவுன் சர்வே ரிஜிஸ்டரில் அவரின் பெயரில் குத்தகைதாரராக பதிவு செய்து கொண்டார் என்பதும், அதற்கு மாத மாதம் குத்தகை தொகையாக ரூ.500 செலுத்தி வந்தார் என்பதும் தெரியவந்தது.
அந்த ஆவணத்தை மேற்படி நபர்களுடன் கூட்டு சேர்ந்து பத்திரப்பதிவு எழுத்தர் வடிவேல், புத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, முத்தரசநல்லூரை சேர்ந்த ரஹமத் நிஷா ஆகியோர் மோசடியாக சாட்சி கையெழுத்திட்டு மூன்றாம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம் மோசடியான ஆவணம் ஆகும்.
இணை சார்பதிவாளர் கணேஷ், பத்திரப்பதிவு தலைவர் மூல வழிகாட்டியதை கடைபிடிக்காமலும் மற்றும் ஆவணங்களை சரிபார்க்காமலும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்தப் பதிவு சட்டப்படி மோசடியானது ஆகும். மேலும், எனது தகப்பனார் ஜெயராமன் 21.11.1999ம் தேதி இறந்தார். ஆனால் மோசடியான ஆவணத்தில் 21.11.1991 அன்று இறந்தது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சொத்து குறித்து அரசு வருவாய் ஆவணங்கள் அனைத்தும் எனது தகப்பனார் ஜெயராமன் பெயரில் உள்ள நிலையில், திருச்சி தாசில்தார் கனகவேல் மேற்படி நபர்களுடன் கூட்டு சேர்ந்து சதி செய்திருக்கிறார்.
இதுதொடர்பான புகார் மனுவை கடந்த 2023ம் ஆண்டு திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்தேன். அந்த புகார், மாநகர குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், குற்றப்பிரிவில் என் புகாரின் மீது இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனே இதுகுறித்து நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்திய திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அனுசுருதி, போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சுரேஷ்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி, டவுன்ஹால் இணை சார்பதிவாளர் கணேஷ், திருச்சி மேற்கு தாசில்தார் கனகவேல், வடிவேல், சாட்சிகள் லட்சுமி, ரஹமத் நிஷா ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் .
அதன்பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட சுரேஷ்குமார் உட்பட 7 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இது அனைத்து பத்திரிகையிலும் வந்த செய்தியாகும் . இந்த போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற சுரேஷ்குமார் வெறும் அம்புதான் . வில் சார் பதிவாளர் கணேசன் தான் .
சார்பதிவாளர் கணேசன் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளது. உதாரணமாக கம்பரசம்பேட்டை மற்றும் முத்தரசநல்லூர் பகுதியில் யாராவது பத்திரம் பதிவு செய்ய பெரும் தொகையுடன் கணேசனை அணுகினால் அந்த கிராம PDO வை நேரில் சந்தித்து நகராட்சி சீலை பெற்று அப்ரூவ்ட் நிலம் என பத்திர பதிவு செய்து தந்துள்ளார் ..
அரசு அலுவலகத்தின் உள்ளே இரவு நேரத்தில் தந்த யாருக்கும் அனுமதி இல்லை . ஆனால் சார்பதிவாளர் கணேசனுக்கு வேண்டிய நபர் ஒருவர் ( வாங்கித் தருவது , குடுப்பது , மற்றும் அனைத்து ஆவணங்களும் எங்கு உள்ளது என்பது எல்லாம் இந்த நபருக்கு தெரியும் என கூறப்படுகிறது ) இரவு நேரத்தில் அலுவலகத்தில் உள்ளையே தூங்கி எந்திரித்து வருகிறாராம் .
டவுன் ஹால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பத்திர பதிவு செய்ய வரும் நபர்கள் தனக்கு வேண்டிய இரண்டு பத்திர எழுத்தாளர்கள் முலம் வந்தால் மட்டுமே உடனடியாக பத்திரப்பதிவு செய்யப்படும் . வேற எழுத்தர்கள் மூலம் பத்திர பதிவு செய்து வந்தால் இது சரியில்லை அது சரியில்லை என அலக்கரிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இவர் திருச்சி லஞ்சத் ஒழிப்புத்துறை உயர் அதிகாரி ஒருவரை கையில் போட்டுக்கொண்டு பல கோடி சம்பாதித்து உள்ளாராம் . ஸ்ரீரங்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை விலைக்கு வாங்கியுள்ளார் என அவரது பத்திர பதிவு துறையில் பணியாற்றும் சில உண்மையான ஊழியர்கள் கூறியுள்ளனர் . வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த நபர்கள் மீது முறைப்படி விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டிய அதிகாரிகளே இவருக்கு துணை போவதால் இவரது ஆட்டம் ஓவராக இருப்பதாக கூறி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வருத்தப்படுகின்றனர். இந்த வழக்குப் பதிவுக்கு பின்னர் ஆவது இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி

