சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி விமான நிலையத்தில் மாயம். மளிகை கடை ஊழியரும் ….
போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 29 ) இவர் கடந்த எட்டாம் தேதி சார்ஜாவில் இருந்து திருச்சி வருகை புரிந்தார் . திருச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சொந்த ஊரான நாகை மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் திருச்சி வந்த சேகர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து பேருந்து ஏரி சென்றுள்ளார்.ஆனால் அவர் ஊருக்கு செல்லவில்லை மாறாக எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாரிடம் உறவினர் கஸ்தூரி என்பவர் புகார் அளித்துள்ளார் . அப் புகாரின் பேரில் ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயனி திடீரென மாயமானது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி எடத்தெரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ரூபன் ராஜ் (வயது 26) இவர் திருச்சி – தஞ்சை ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3ந்தேதி திடீரென்று இரவு மளிகை கடையில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.மேலும் அவர் வீட்டுக்கும் செல்லவில்லை. இந்நிலையில் பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் ஜஸ்டின் ரூபன் ராஜ் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய சகோதரர் பிரான்ஸ் மரியஜெரால்டு பாலக்கரை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜஸ்டின் ரூபன் ராஜயை தேடி வருகின்றனர்.

