70 ஆயிரம் டாலர் பரிசு விழுந்து உள்ளது எனக் கூறி 9ம் வகுப்பு மாணவனிடம்..ஜிபே மூலம் ரூ. 45 ஆயிரம் பறிப்பு.
தமிழகத்தில் உள்ள நகரங்களில் நாளுக்கு நாள் இணைய வழியில் மோசடிகள் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது.
இதில் ஏமாறாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் சைபர் கிரைம் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் மோசடி சம்பவங்கள் புதிய புதிய வழிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வேலூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஏமாற்றி ஜிபே மூலம் 45 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தனது தம்பிகளுடன் வசித்து வருகிறார். டைலரிங் வேலை செய்து குடும்பம் நடத்தி வரும் அந்த இளம் பெண்ணின் செல்போனை, தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது தம்பி கோகுல் ( 13 வயது சிறுவன்) அவ்வப்போது பயன்படுத்தி வந்துள்ளான்.
சம்பவத்தன்று காலையில் அந்த இளம்பெண் போனுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் வந்துள்ளது. அதனை அந்த மாணவன் பார்த்தபோது உங்களுக்கு 70 ஆயிரம் டாலர் பரிசுப் பொருள் விழுந்துள்ளது. பிரான்சிலிருந்து விமானத்தின் மூலம் கொரியரில் வரவுள்ளது. அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்அப்பில் தமிழில் டைப்பிங் மெசேஜ் வந்துள்ளது.
இதை உண்மை என்று நம்பிய அந்த சிறுவன், அவனது அக்காவிற்கு தெரியாமல் கூகுள் பேவில் ஐந்தாயிரம் அனுப்பி உள்ளான். அதேபோல் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அந்த மோசடி நபர்கள் தமிழில் மெசேஜ் அனுப்பி அந்த சிறுவனிடம் இருந்து 15,000 25,000 என மொத்தம் 45 ஆயிரம் மோசடியாக பெற்றுள்ளார்.
தொடர்ச்சியாக டெல்லி விமான நிலையத்தில் பார்சல் பிடிக்கப்பட்டதாகவும் 70 ஆயிரம் டாலர் பார்சலில் இருப்பதால் அதற்காக ஒரு லட்சத்து 60 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் மீண்டும் அதற்கான பணத்தை கூகுள் பே வில் அனுப்பினால் பரிசுப் பொருள் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி மீண்டும் மெசேஜ் வந்துள்ளது . அப்போது அந்த சிறுவன் எங்களிடம் பணம் இல்லை.. நாங்கள் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பி விடுங்கள் என சொல்லி மெசேஜ் செய்துள்ளான்.. அதற்கு எதிர் முனையில் இருந்து பதில் இல்லை..

இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் வந்த நெம்பருக்கு போன் செய்யும் போது போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இது குறித்து அவன் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் இருந்துள்ளான். அடுத்த நாள் காலை அந்த சிறுவனின் அக்கா கூகுள் பே மூலம் பொருட்களை வாங்க செல்போன் பார்த்தபோது பணம் இல்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது தம்பியை விசாரித்த போது இதுபோல் 45 ஆயிரம் ரூபாய் பரிசு பொருட்களுக்காக அனுப்பி உள்ளேன் என கூறியுள்ளான்.இதனையடுத்து வாட்ஸ் அப்பில் பார்த்தபோது தமிழில் வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்..
உடனடியாக தனக்கு தெரிந்த உறவினர்களிடம் இது குறித்து கூறியபோது, இது மோசடி என்றும் இது குறித்து உடனடியாக வேலூரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர். அந்த சிறுவன் பணம் அனுப்பிய தகவல் வீட்டில் யாருக்கும் தெரிவிக்கவும் இல்லை.. வந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.. இது போல் மோசடி நபர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்க இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

