திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் உள்நாட்டு வர்த்தகத்தை சீர்குலைக்க கூடிய அந்நிய வர்த்தக நிறுவனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் .
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யும் மசோதாவை
சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது,
கூட்டத்திற்கு
மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன்
தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி மாவட்ட தலைவர் மாமுண்டி கூழையன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .
மாநில அவைத் தலைவர் தேவராஜ், மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
மாநில தலைமை நிலைய செயலாளர் கிச்சா ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர் .

கூட்டத்தில் உள்நாட்டு வர்த்தகத்தை சீர்குலைக்க கூடிய அந்நிய வர்த்தக நிறுவனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது.
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்.
அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் மருத்துவத்திற்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் குறைக்க வேண்டும்.
விலைவாசி ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ள சுங்க சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும்.
சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மார்க்கெட் எஸ் வெங்கடேசன், பெருமாள் சங்கர்,
S.டேவிட், ரூபன் கோவிந்தராஜ் M.நௌஷாத், S.P. சரவணன்,P.சங்கர் கன்டோன்மென்ட் கார்த்திக், வீரசேகர் நாகராஜ், பிரவின்குமார், தமிழ்,
சாமுவேல், ஜெயசீலன்,
அரவிந், லால்குடி கார்திக், மார்க்கெட் மாரிமுத்து, வரகனேரி மோகன், மார்க்கட் ஹரி, சிம்க்கா ரேவந்த், டோல்கேட் விவேகானந்தன் , வம்சம் ப்ராப்பர்ட்டி அஜ்முகமது, அப்துல் கலாம், அபுல் ஹாசன், ஹசன், பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்,
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில்
மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

