சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல். திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன் ரூ.49 லட்சம் கையாடல்..
சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல்.
திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன் ரூ.49 லட்சம் கையாடல்..
விசாரணை தீவிரம்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அந்த சுமைக்கான தொகையை ரொக்கமாக வசூலிப்பது வழக்கம். இதனை வசூல் செய்யும் பணியை தனி யார் நிறுவன ஒப்பந்த
பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ரூ.3.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் பெண் பணியாளர் ஒருவரை பிடித்து விமான நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவினர் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல்வேறு திவிக்கிடும் தகவல்கள் வெளிவந்ததாக தெரிய வருகிறது. இந்த சம்பவத்தில் விமான நிறுவனத்தில் சுமார் ரூபாய் 49 லட்சம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் இந்த விசாரணையில் ரொக்கம் கையாடல் செய்வதற்கு மூன்று அதிகாரிகள் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த விசாரணை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

