திருச்சி: அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி அருகே இன்று காலை பரபரப்பு சம்பவம்.
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூறாவளிப்பட்டி கிராமத்தில்
அரசு மதுபான கடை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி குடிக்கும் குடிமக்களால்
அந்த கிராமத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகிறது. குறிப்பாக மது பிரியர்களின் குடும்பத்தினர் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.மேலும் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மதுபான கடை அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல பெரும் சிரமப்படுகின்றனர்.
எனவே அந்த கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 8 மணி அளவில்
சூறாவளிப்பட்டி
கிராமத்திற்கு வந்த பேருந்தை பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வழி மறித்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட
மாணவ, மாணவிகள் கையில் மதுபான ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தீர்வு ஏற்படாததால்
சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் தாசில்தார் செல்வகணேஷ்,
மற்றும் துணை கண்காணிப்பாளர் சந்தியா ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் இரண்டு மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

