திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த இளம் பெண் மாயம்.
தாயார் போலீசில் புகார்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மன்சூர், பவுசில் கரிமா ஆகியோரது மகள் ரபிகா (வயது 22 ) இவருக்கு திருமணம் ஆகி மலேசியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4ந் தேதி ரபிகா மலேசியாவில் இருந்து திருச்சி வந்து சொந்த ஊரான அதிராம்பட்டினம் சென்றார். அங்கு தாய் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்த ரபிகா கடந்த 25 ந்தேதி மீண்டும் மலேசியா செல்வதற்காக தாய் பவுசில் கரிமவுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் தாய் பவுசில் கரிமா ரபிகாவை வீட்டு விட்டு அதிராம்பட்டினம் சென்று விட்டார். பிறகு மலேசியாவிற்கு பவுசில் கரிமா விசாரித்த போது ரபிகா அங்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த
பவுசில் கரிமா இந்த சம்பவம் குறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருச்சி விமான நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து
மலேசியா செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பெண் மாயமானது எப்படி? அவர் எங்கு சென்றார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
						
 
						
