திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில்
இருசக்கர வாகனத்தில்
புகையிலை பொருள்கள் கடத்தல் – 2 பேர் கைது
பாலக்கரை காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார் சங்கிலியாண்டபுரம் மயானம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் இனாம்குளத்தூர் ரஹ்மத் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 45), லால்குடி தாளக்குடி பகுதியைச் சேர்ந்த சபீர் (வயது 35) என்பதும், அவர்கள் இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து ரூபாய் 24 ஆயிரம் மதிப்புள்ள 10.5 கிலோ புகையிலை பொருட்கள், மற்றும் அதை கடத்தி வர பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

