திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில்
கறிக்கடைக்காரர் தற்கொலை . கோட்டை
போலீசார் விசாரணை.
திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, கோட்டை, நகை கடைக்கார குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நியாஸ் (வயது 53). இவர் வீட்டின் அருகே கறிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார். இதனால் நியாஸ் மன உளைச்சலில் இருந்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று வெகு நேரமாகியும் வீட்டை விட்டு நியாஸ் வெளியே வராதது தெரியவந்தது. இதையடுத்து அவரது மகன் உஸ்மான் உள்ளே சென்று பார்த்தபோது நியாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து உள்ளது . இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

