திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் சிறுகாடு தோப்பு பொய்யாமணி கரையில் உள்ள வாழைத் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை திரிவதை கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் அந்த முதலை வாழை தோப்பிற்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் முதலையை லாவகமாக மீட்டனர்.
பின்னர் முக்கொம்பு மேலணை வாத்தலை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக முதலையை தண்ணீரில் விட்டுள்ளனர். இதனால், கொள்ளிடம் ஆற்றில் தினந்தோறும் குளிக்கச் செல்லும் நபர்கள், மீன் பிடிக்க செல்பவர்கள் ஆகியோர் அச்சம் அடைந்துள்ளனர்.

