திருச்சியில் இன்று நடந்தது
ரெயில் விபத்து ஒத்திகை நிகழ்ச்சி
தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் விபத்து தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி ரெயில்வே குட்ஷெட் யார்டு பகுதியில் நடைபெற்றது. ரெயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஒத்திகையாக செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை 8.30 மணி அளவில் திருச்சி குட்ஷட் யார்டு பகுதியில் சென்ற ஒரு ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக 1. ஏசி’ 2,பொது ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடப்பத்தை போன்று சித்தரிக்கபட்டு இருந்தது. மேலும் கவிழ்ந்து கிடந்த ரெயில் பெட்டியில் தீப்பிடித்து புகை மளமளவென்று வெளிவந்தது. இதை விபத்தாக கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்த அபாய சங்கு ஒழிக்கப்பட்டது . உடனே தளபாட பொருட்கள் , அவசர உதவி பொருட்கள் , திரையில் உடன் கூடிய விபத்து மீட்பு பொருட்கள் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து குட்ஷெட் யார்டுக்கு கொண்டுவரப்பட்டது .

பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் தீயணைப்புத்துறையினர் பேரிடர் மீட்பு குழுவினர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில்வே . போலீசார் ரெயில்வே அதிகாரிகள் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது தகவறிந்து அனைவரும் அங்கு திரண்டு வந்தனர். பிறகு தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வண்டியுடன் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் வந்தனர்.பின்னர் கவிழ்ந்து கிடந்த ரெயில் பெட்டியின் மீது ஏறி தீயணைப்புத்துறை ஊழியர்கள் முதலில் தீப்பிடித்த ரெயில் பெட்டியை அணைத்தனர். ரெயில் பெட்டி ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று ரெயில் பெட்டிக்குள் சிக்கியிருந்த பயணிகள் ஒவ்வொருவரையும் பத்திரமாக காப்பாற்றி கீழே இறக்கினர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்த பேரிடர் மீட்பு குழுவினர், திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில்வே போலீசார் கொண்ட குழுவினர்
காயமடைந்த பயணிகளை காப்பாற்றினார்.

இதையடுத்து உடனடியாக மருத்துவர் குழுவினர் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பிறகு அதிக பாதிப்பு உள்ள பயணிகளை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விபத்து தடுப்பு மற்றும் மருத்துவ முதலுதவி ரெயில் வந்தது. அந்த ரெயிலில் மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.அந்த ரெயிலில் இருந்த மருத்துவ குழுவினர் விபத்தில் காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளித்தனர் இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் வந்து மோப்பநாய் உதவியுடன் தண்டவாளத்தை சோதனை செய்தனர். பிறகு ரெயில்வே ஊழியர்கள் உடைந்த தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இந்த ஒத்திகை சம்பவத்தால் அந்தப் பகுதியில் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அனைத்து பொதுமக்கள் ஏராளமானவர்கள் அங்கு கூடி இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி போது திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி திருச்சி கோட்ட பாதுகாப்பு பிரிவு முதுநிலை அலுவலர் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்து

