டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி
திருச்சி பள்ளிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று செய்தித்தாள் புத்தகம் வாசித்து 2 புதிய உலக சாதனை.
திருச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை யொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து 30 நிமிடம் செய்தித்தாள், புத்தகம் வாசித்து இரண்டு புதிய உலக சாதனை படைத்தனர் .பெரிய கடை வீதி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பொன்மலை ஹோலி ரெடிமேட்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகாத்மா காந்தி வித்யாலயா, பிஷப் ஹீபர் மேல்நிலை ப்பள்ளி, பொன்னையா மேல்நிலைப்பள்ளி , பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராம நடராசா உயர்நிலைப்பள்ளி கரியமாணிக்கம் ஆகிய பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர் ஆசிரியர் முன்னிலையில் தொடர்ந்து 30 நிமிடம் செய்தித்தாளும் புத்தகமும் வாசித்து இரண்டு புதிய உலக சாதனை படைத்தனர் இந்த சாதனை வீடியோ மற்றும் புகைப்படத்துடன் ஆய்வு செய்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்ட்ஸ் இந்திய அகாடமி நிறுவனரும் பிரபல கின்னஸ் உலக சாதனையாளர் கராத்தே டேக்வாண்டோ கிரான்ட் மாஸ்டர் டாக்டர் டிராகன் ஜெட்லீ உலக சாதனைக்கான சான்றிதழ்களை அனுப்பி வைத்தார் .
இந்த உலக சாதனை மூலம் மாணவர்கள் புத்தகம் மற்றும் செய்தித்தாளில் ஆர்வம் மற்றும் கவனத்துடன் தொடர்ந்து படிப்பார்கள் அவர்கள் ஆற்றல் கவனிக்கும் திறன்அதிகரிக்கும் புத்தக வாசிப்பில் ஆர்வத்தை தூண்டுவதற்காக இந்த உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது.

