பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின் வாரியம் சுழற்சி முறையில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இது தொடர்பான முன்னறிவிப்பை மின் வாரியம் தரப்பு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில், நாளைய தினம் (15.10.2025) புதன்கிழமை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு..
மின் தடை அறிவிப்பு:
திருச்சி மாவட்டத்தில் லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர், சிறுத்தையூர், மணக்கல், புஞ்சை சங்கேந்தி, சென்கல், மும்மதி சோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு ஆகிய இடங்கள். மேலும், பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர்.
அதேபோல, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர், கடுதுறைமடங்குளம், ஏலூர்பட்டி ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது .