திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி வேண்டி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்.
திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இன்று வரை விடுதி வசதி ஏற்படுத்தப்படாமல் இருப்பது மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றி, உடனடியாக விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்களிடம் இன்று திங்கட்கிழமை (29.9.2025) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
இந்த நிகழ்வுக்கு சட்டக் கல்லூரி கிளைத் தலைவர் அபிராமி தலைமையேற்றார். இதில் மாவட்ட துணைத் தலைவர் அன்பு, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்த்தி, சட்டக் கல்லூரி மாணவர்கள் உபக்குழு துணைப் பொறுப்பாளர் மணி ஆகியோர் கலந்து கொண்னர் .
சட்டக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு தூர இடங்களிலிருந்து வருகிறார்கள். விடுதி வசதி இல்லாததால், தங்குமிட பிரச்சினை, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருவதால் அதிக செலவுகள், பாதுகாப்பின்மை போன்ற சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அரசு உடனடியாக விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும்;
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிர்வாகம் ஏற்று, விரைவில் நடைமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.