பாகிஸ்தான் கற்கள் ஏற்றிய லாரி. நாங்கள் மோதினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கடுமையாக இந்தியாவை தாக்கி பேசியவர் தான் ஆசிய கோப்பையை இந்தியா பெறாமல் செய்தவர் .
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வி, கோப்பையை நான்தான் வழங்குவேன்.. இல்லையென்றால் கொடுக்க மாட்டேன் என்று கூறி கோப்பையை கையோடு எடுத்து சென்றார்.
நேற்று துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 69 ரன்களை எடுத்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது.
வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்ததால் பரிசளிப்பு விழாவில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. இதனால், இந்திய அணி கோப்பை இல்லாமலேயே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
இந்தியா அணி வெறும் இரண்டு வாரங்களில் பாகிஸ்தானை மூன்றாவது முறையாக தோற்கடித்து ஆசியக் கோப்பையை வென்றது. ஆனால், சூர்யகுமார் யாதவும் இந்திய அணியும் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தனர். இதனால், நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு மேடையிலிருந்து வெளியேறினார்.
இவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்தியாவிற்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டிற்காக அறியப்படும் நக்வி, இந்தியாவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இந்தியாவை பல மேடைகளில் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.
இந்தியா வேண்டும் என்றால் பளபளப்பான கார் போல இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் கற்கள் ஏற்றிய லாரி. நாங்கள் மோதினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கடுமையாக இந்தியாவை தாக்கி பேசினார்.
சமீபத்தில், ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் ஹாரிஸ் ரவுஃப் செய்த சர்ச்சைக்குரிய சைகை குறித்தும் நக்வி கருத்து தெரிவித்திருந்தார். ஹாரிஸ் ரவுஃப் ரஃபேல் போர் விமான அசைவுகளைப் போல நடித்து, இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை கேலி செய்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது. நக்வி இதை ஆதரித்து போஸ்டுகளை செய்தார். பாகிஸ்தான் வீரரின் சிறுபிள்ளைத்தனமான செயலை ஆதரித்த போஸ்டுகளை அவர் லைக் செய்திருந்தார். இதற்கு ஆதரவாக பல போஸ்டுகளை செய்தார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்தில் இந்தியாவை கடுமையாக தாக்கி பல முறை இவர் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
பாகிஸ்தான் அமைச்சர் கோப்பையை வழங்குவார் என்று இந்திய அணிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதை அவர்கள் ஏற்க மறுத்து இந்திய அணி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அவரிடம் பேச விரும்பவில்லை என்றும் இந்திய அணி தெரிவித்தது. ACC தலைவராக, தான்தான் கோப்பையை வழங்குவேன் என்ற தனது நிலைப்பாட்டில் நக்வி உறுதியாக இருந்தார். ஆனால், இந்திய அணி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) முழு ஆதரவுடன், நக்வி தவிர வேறு யாரிடமிருந்தும் கோப்பையை ஏற்றுக்கொள்வோம் அவரிடம் வாங்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதையடுத்து வென்ற அணிக்கு கோப்பை செல்ல வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்.. நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். அவரின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.