திருச்சி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பத்திர பதிவுத்துறை இணைப் பதிவாளருக்காக ரூ.55 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலுவலக உதவியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை.
திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.53,500 பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி நீதிமன்ற வாளகத்தில் உள்ள பத்திரப் பதிவுத் துறை இணைப் பதிவாளா் அலுவலகத்தில் இடைத்தரகா்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் கோ. மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா், அந்த அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அலுவலக உதவியாளா் அறிவழகனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.53,500 -ஐ பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் இணைப் பதிவாளருக்காக லஞ்சம் பெற்றதாக அவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .