Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .

0

'- Advertisement -

திருச்சியில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை

அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் சங்க கூட்டத்தில்

புதிய நிர்வாகிகள் தேர்வு.

 

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் சார்பில் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தேர்தல் திருச்சியில் மாநிலத் தலைவர் எஸ்.மதுரம் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார் .மாநில பொதுச் செயலாளர் முனியப்பன் வரவேற்றார். தேர்தல் ஆணையர் சண்முகம் தேர்தலை நடத்தினார்.

இதில் மாநில தலைவராக சம்பத்குமார், மாநில துணை தலைவர்களாக ஆறுமுகராஜ், முனியசாமி, பொதுச் செயலாளராக நல்லுசாமி, மாநில துணைப் பொதுச் செயலாளர்களாக சரவணன், சிவக்குமார், மாநில பொருளாளராக ரவிச்சந்திரன், மாநில தணிக்கையாளராக சுந்தர்ராஜன், மாநில அமைப்பு செயலாளராக முருகன், மாநில பிரச்சார செயலாளராக கோவிந்தராஜ், மாநில மகளிர் அணி செயலாளராக கலைவாணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .பின்னர் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

பின்பு மாநில செயற்க்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில்’ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கீழ்க்கண்டவாறு:

 

1) பதித்துறையில் உள்ள பதிவுத்துறைத்தலைவர் அலுவலகம், துணை மாவட்டப் பதிவுத்துறைத்தலைவர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் /1. நீர், 2 நீர் இணை சார்பதிவாளர் அலுவலகம், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிலை அரசாணை எண்.132/98-ன்படி ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திறற்கு இரண்டு அலுவலக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

 

2) பதிவுத்துறையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள இரவுக்காவலர்கள் பணியிடங்களை நீதிமன்ற உத்தரவிற்கிணங்க (வழக்கு .21736 of 2014, M.P.No.s82 of 2014, W.P.Nos.2903 of 2016-4685 of 2012) நிரப்பிட வேண்டும் .

 

3) பதிவுத்துறையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் தண்ணீர் வைக்க, கழிவறை சுத்தம் செய்திட அலுவலகம் சுற்றுப்புறம் சுத்தமாக வைத்திட மசால்ஜி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

 

4) அனைத்து மாவட்டப்பதிவாளர் அலுவலகம், அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் அலுவலக பணிக்கு வெளியாட்களை வைத்து பணிப்பார்ப்பதை தவிர்த்து உரிய பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும்.

 

5) பதிவுத்துறையில் ஏற்படும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்கு அலுவலக உதவியாளர்கள் பாதி படுகிறார்கள் அதனை தவிர்த்திட வெளியாட்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

 

இதனால் கையூட்டு பெறுபவர்கள் தப்பித்து கொள்ள அலுவலக உதவியாளர்கள் பாதிப்புக்குள்ளாகி, பல ஆண்டுகள் ஆகியும், அவர்களை விடுவிக்காமல் அவர்களது பணிமாற்றம், பதவி உயர்வு ஊதிய உயர்வு (ம) பணப்பலன்கள் பாதிக்கப்படுகின்றன.

 

பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள், இரவுக்காவலர்கள் விடுவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்,

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

முடிவில் மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.