கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாட்டில் முடிவு.
கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாட்டில் முடிவு
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் பிரகலாதா வரவேற்புரை வழங்கினார்
பொதுச் செயலாளர் நூர்ஜகான் கோரிக்கை விளக்க உரை வழங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன்,
தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ் உதவியாளர் சங்கம் வாசுகி , பொதுச் செயலாளர் இமயமலை, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம்
தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கம் மாநிலத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சத்துணவு ஊழியர்கள் போராட்ட ஆயத்த மாநாட்டில் 276 ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
,இதில்கீழ்கண்ட கோரிக்கைகள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது :-
தமிழக முழுவதிலும் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
அனைத்து அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் ரூபாய் 6750 /_ஐ அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு திட்ட ஊழியர்கள் மூலமாக வழங்கிட வேண்டும்.
அரசாணையின்படி 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளருக்கு பதிவுறு எழுத்தராக பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.
பெண் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1.1.1993 முதல் 31.12.1995 அவரை பட்டியல் கேட்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமசேவிகா பதவி உயர்வு வழங்கப்படவில்லை உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும்
ஓய்வு பெறும் வயதை 60வதிலிருந்து 62ஆக்உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வருடம் முழுவதிலும் 12 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக்கெள்ள அனுமதிப்பதைப் போல சத்துணவு ஊழியர்களுக்கும் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
நிறைவேற்றிட
முடிவுகள் எடுக்கப்பட்டது .
20.9.2025- போராட்ட ஆயத்த மாநாட்டில் எடுக்கப்பட்ட போராட்ட முடிவுகள்
8.10.2025. ஒரு நாள் அமைப்பாளர்கள் மட்டும் தற்செயல் விடுப்பு போராட்டம்
7.11.2025. மாவட்ட அளவில் பெருந்திரள் முறையீடு
17.12.2025 மாநில நிர்வாகிகள் சென்னையில் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் சந்தித்து கோரிக்கை குறித்து எடுத்துரைப்பது
2026 -6, 7, 8. சென்னை சேப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டம் –
இறுதியாக நமது கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில் மாநில செயற்குழுவினை நடத்தி காலவறையறையற்ற போராட்டத்திற்கு செல்வது என முடிவெடுக்கப்பட்டது .
மாநாட்டின் முடிவில் மாநிலத் துணைத் தலைவர் மிக்கேலம்மாள் நன்றி கூறினார்.