திருச்சி ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சி ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுருதி மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .மேலும் இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அவர்கள் பெயர் வருமாறு :
நிர்வாக குழு உறுப்பினர்களாக
1.ரபியுதீன்
2.மு.சையது முஸ்தபா
3.திருமாவளவன்
4.இப்ராம்ஷா
5.லக்கி ஷாஜகான்
6.சலீம்
இந்த கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1.இச்சங்கம் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்படுகிறது.
2. நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது
3. இச்சங்கம் செல்போன் சேல்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களுக்கு செய்யும் வியாபாரிகளுக்கு மட்டுமே தொடங்கப்படுகிறது.
4. வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் ஆன்லைன் விற்பனைகளை தடை செய்ய வலியுறுத்தி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தல்.
5. போலி வியாபாரம் சமூக வலைத்தளத்தில் பரப்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தல்.
6. வருடத்திற்கு ஒரு முறை சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவது நடத்துவது
7. இச்சங்கம் சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவது.
இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திருச்சியில் உள்ள செல்போன் வியாபாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.