திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாகத்தின் காம்பவுண்ட் சுவர் பொக்லைன் மோதி இடிந்து விழுந்ததில் 2 காவலர்களின் வாகனங்கள் சேதம்.
திருச்சி கண்டோன்மெண்ட்
காவல் நிலைய வளாகத்தின் காம்பவுண்ட் சுவர் பொக்லைன் எந்திரம் மோதி இடிந்து விழுந்ததில் 2 பெண் காவலர்களின் வாகனங்கள் சேதம்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காவல் நிலையங்கள் உள்ளது.இந்த கண்டோன்மென்ட் காவல் வளாகத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம்,குற்றப்பிரிவு காவல் நிலையம்,போக்குவரத்து பலனாய்வு பிரிவு காவல் நிலையம்,காவல் கட்டுப்பாட்டு அறை,சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு,திருச்சி மாநகர ஆக்கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு,போலீஸ் கிளப் ஆகியவை செயல்பட்டு வருகிறது.இந்த வளாகம் ஒரே காம்பவுண்டுக்குள் உள்ளது.
இந்நிலையில் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய வளாகத்தில் கழிவறை கட்டும் பணி நடந்து வருகிறது.அந்தப் பணிக்காக காம்பவுண்ட் சுவற்றின் அருகில் மணல் மற்றும் ஜல்லி கற்கள் ஒப்பந்ததாரரதால் கொட்டப்பட்டு இருந்தது.இன்று காலையில் கலைக்காவேரி சாலையில் சாலை பணிகள் நடந்து கொண்டிருந்தது.சாலைப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மூலம் ஜல்லிக் கற்களை ஒதுக்கி பணிகள் நடைபெற்று வந்தது.
சுமார் பத்தே முக்கால் மணி அளவில் பணி நடக்கும் போது பொக்லை இயந்திரம் மூலம் ஜல்லியை ஒதுக்கிக் கொண்டு இருந்த போது காம்பவுண்ட் சுவற்றில் பட்டது. அப்போது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பெண் காவலர்களின் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.அப்போது ஆண் பெண் காவலர்கள் திரண்டனர், இதனால் கண்டொன்மெண்ட் காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இது குறித்து கண்டேன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.