திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பாலை தரையில் கொட்டி வீணாக்கி விளம்பரம் தேடிய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு .
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில்
பாலை தரையில்
கொட்டி வீணாக்கிய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு .
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பலர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் திடீரென பல லிட்டர் பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்
.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் தெற்கு சேர்பட்டியில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வசதியாக சொசைட்டி ஆரம்பித்து தர கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பால்வளத்துறை அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சுமார் 4.5 கிலோமீட்டர் வரை சென்று பாலை வடக்கு சேர்பட்டியில் உள்ள சொசைட்டியில் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே இதை கண்டித்து பாலை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர் .
தனது ரத்தத்தை பாலாக மாற்றி தருகிறது மாடு . பலரது உழைப்பில் கறக்கப்பட்ட இந்த பல லிட்டர் பாலை பல ஏழைகள் தினமும் பால் வாங்க முடியாத நிலையில் உள்ளனர் அவர்களுக்கு இவற்றை இலவசமாக வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் . அதை விட்டுவிட்டு பால் போன்ற உணவுப் பொருட்களை தரையில் கொட்டி வீணாக்குவது அய்யாக்கண்ணுவின் வீண் விளம்பரம் ஆகும் என அப்பகுதியை கடந்து சென்ற பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து சென்றனர் .