
திருச்சியில் ஐ.டி ஊழியரை ஹெல்மெட்டால் தாக்கி நகை, பணம் பறிப்பு .
4 நபர்களுக்கு போலீசார் வலை .

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 38 ). இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் க இவர் பெங்களூரில் இருந்து திருச்சி வழியாக பேருந்தில் தன் சொந்த ஊருக்கு சென்றார். அப்போது இவரிடம் விஷ்வா என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் சதீஷ் தன் வீட்டிலிருந்து பெங்களூர் சென்றபோது அந்த மர்ம நபர் மீண்டும் திருச்சியில் பஸ்ஸில் சந்தித்துள்ளார் .அப்போது அந்த மர்ம நபர் இவரிடம் தான் உடைமைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகவும் அதை எடுத்து வர வேண்டும் என கூறி இவரை இருசக்கர வாகனத்தில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்ந்து இவரை ஹெல்மெட்டால் தாக்கி இவரிடம் இருந்த ரூபாய் 48 ஆயிரம் பணம் ஒரு செல்போன் மற்றும் இரண்டு பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து கன்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸார் பதிந்து, தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

