Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

0

'- Advertisement -

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள். 2025.

20.08.25 மற்றும் 21.08.25 இரண்டு நாள்கள் திருச்சியில் நடைபெற்றது

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் திருச்சி மாவட்ட தடகள போட்டி தேதி 20.8.2025, காலை 9.30 மணி அளவில் 8, 10, 12,14,16, 18 மற்றும் 20 வயது பிரிவினருக்கான; ஆண்- பெண் இருபாலருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்-2025.

தொடக்கவிழாவிற்கு

M.ஆனந்தன், Commandant of Police, TSP 1 BN, & துணைதலைவர், TDAA,

 

ஸ்ரீஸ்ரீ வேலு தேவர் அய்யா அவர்கள் ஸ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை, கலந்துக் கொண்டு தொடங்கிவைத்தார்கள்.

 

நேற்று வியாழக்கிழமை 21.8.2005, மாலை 5.30 மணிஅளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நடைபெற்றது .

திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் D.ராஜு தலைமையில், தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, பொன்மலை ரயில்வே ஏ.பி.ஒ சுந்தரமூர்த்தி.,மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

தடகள சங்க இணை செயலாளர் எம். ரமேஷ் வரவேற்றார்.

 

ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்று உள்ளார்கள்.

வெற்றி பெற்றவர்களை பனானா லீப் மனோகரன், துணை தலைவர் தாமஸ் ஞானராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

 

விழாவிற்கு உதவி செயலாளர் கனகராஜ், முனைவர் சுதமதிரவிசங்கர், இணைச்செயலாளர் சுந்தரேசன், தடகள சங்க தொழில்நுட்ப பிரிவு ஆர்.நடராஜன், முனைவர். ஹரிஹர ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

 

முடிவில் மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்காசாரி நன்றி கூறினார்.

நடைபெற்ற இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆண்கள் 86 பேர் மற்றும் பெண்கள் பிரிவில் 86 பேரும் மாநில அளவிலான  போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.