திருச்சியில் கூலி திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.
திரையரங்கு முன்பு நடனம் ஆடி மகிழ்ந்தனர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படத்தை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
படம் வெற்றி பெற வேண்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலில் வழிபாடு செய்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்திக்கொண்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அப்பகுதியில் திரையரங்கின் முன் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர்களுக்கு பூக்களை தூவினர்.
அதே போல கோட்டை ஸ்டேசன் ரோடு பகுதியில் உள்ள திரையரங்கின் முன் டி.ஜே அமைத்து ஆடி. பாடியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
கூலி திரைப்படம் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் மிகுந்த எதிர்பார்ப்போடு வந்துள்ளோம் நிச்சயமாக எங்கள் எதிர்பார்ப்பு போட்டி அடையும் ரஜினியை காணவே முதல் நாள் முதல் காட்சிக்கு வந்துள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.