திருச்சி மாநகரில்
‘போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பிரபல ரவுடிகள் அதிரடி கைது.
கஞ்சா ,மாத்திரைகள் பறிமுதல்.
திருச்சி பொன்மலை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற பொன்மலை மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (வயது 26) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.அவரிடமிரந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பாலக்கரை போலீசார் காஜா பேட்டை பெரது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற சரித்திர பதிவேடு ரவுடியான விஜய் பாபு (வயது 28 ) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் காந்தி மார்க்கெட் சூளக்கரை மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற சரித்திர பதிவேடு ரவுடி முகமது யாசர் ( வயது 25 ) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் 34 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது .