53435 டாலர் மதிப்பில் திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி அமைப்பதற்க்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இளைத்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் டாக்டர் சீனிவாசன் அவர்களின் நேரடி பங்களிப்பாக அமெரிக்கா டாலர் மதிப்பில் 53435 ( டாலர்) திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி அமைப்பதற்க்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை (9.8.2025) நடந்த தொடக்க விழாவில் டி.இ.எல்.சி. பிஷப் , கிரஸ்டியன் சாம்ராஜ் அவர்களுடன் பன்னாட்டு ரோட்டேரியன் இயக்குநர் எம். முருகானந்தம் இத்திட்டத்தை இணைந்து ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு ஒப்படைத்தனர்.
இவ்விழாவில் சீனிவாசன் மற்றும் கார்த்திக். சுப்பிரமணியன், லியோ பெலிக்ஸ் லுாயிஸ், ராஜா கோவிந்தசாமி, R. கண்ணன் மற்றும் ஜோஸப் கண் மருத்துவ மனையின் இயக்குநர் Dr. பிரதிபா திருச்சபை பொருளாளர் ஞான பிரகாசம், ஆகியோர் கலந்து கொண்டனர் .திருச்சி வேறு எங்கும் இல்லாத அதிநவீன மருத்துவ இயந்திர மற்றும் உபகரணகளை மருத்துவ மனை கண் வங்கிக்கு வழங்கினர். கண் மனித இனத்திற்கு மகத்தான திறவுகோல் , கண்தானம் மனித வாழ்நாளில் செய்யக்கூடிய மிகச் சிறந்த தானம. இப்படிப்பட்ட மகத்தான கணதானம் செய்தும், சிறந்த தொழில் நுட்பம் இல்லாத காரணத்தால் கண்தானம் செய்தும், சிறந்த முறையில் சிகிச்சை அளித்து கண்தானம் பெறப் பட்ட நபர்களுக்கு சிசிக்சை செய்து பலன் இல்லாமல் போகிறது. இதனை தடுக்கும் பொருட்டு திருச்சியில் முதன் முறையா அமெரிக்க டாலரில் 53435 ந்து டாலர் பெறுமானத்திலும், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.45 லட்சம் மதிப்பு, செலவிலும் திறந்து வைக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சி ஏர்பாட்டினை ரோட்டரி நிர்வாகிகள் ,M.A. முகமது தாஜ்,லிஸி. அசோமுக, G. சத்ய நாராயணன், ஹனிபா பீ.சான வாஸ், மற்றும் திருச்சி ஜோஸப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் இணைந்து செய்தனர்.