தேசிய லஞ்ச ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இயக்கமான தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு குழு நிறுவனர் முனைவர் டி.ஆர்.ராஜமோகன் அவர்களால் அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் ஊழல் குற்றங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இதில் திருச்சியை சேர்ந்த வீழாத்தமிழன் ராஜேஷ் அவர்களுக்கு தென்னிந்திய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி ராஜேஷ் பள்ளிக் காலத்தில் தேசிய பசுமை இயக்கத்தில்
(NGC) ஈடுபட்டவர். கல்லூரி காலத்தில் தேசிய சேவை திட்டம்.(NSS) ஈடுபட்டவர். துளசி பசுமை இயக்கம் என்ற அமைப்பின் மூலம் கிராமங்களில் பனை விதைகள் விதைப்பு ஏற்படுத்தி கொண்டும்.
ஜல்லிக்கட்டு,
காவிரி நதிநீர் பிரச்சனை போராட்டம் போன்றவற்றில் களத்தில் முனைப்புடன் ஈடுபட்டவர்.
வீழாத்தமிழன் மற்றும் களத்தில் வென்றான் குறும்படங்களில்
நடித்து வெளியிட்டு அதன் மூலம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார்.தற்போது ஏழ்மையின் உலகம் அறக்கட்டளையுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவி செய்து வருகிறார்.
அவரது எண்ணத்தில் சமூக அக்கறை கலந்துள்ளதை அறிந்த முனைவர் டாக்டர் டி.ஆர். ராஜமோகன் தேசிய லஞ்சம் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு இயக்கத்தில் (ACVC) வீழாத் தமிழன் ராஜேஸ் அவர்களுக்கு தென்னிந்திய பொதுச் செயலாளராக பதவி அளித்துள்ளார்.
இவர் இந்த இயக்கத்தில் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.முதலில் மாவட்ட செயலாளர், பிறகு மாநில இணை பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்து தற்பொழுது தென்னிந்திய பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.