Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் போராட்டம்.

 

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் பழக்கடை மற்றும் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று மாலை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் போதையில் விற்பனையாளர் அருண்னிடம் வந்து பழத்தை வாங்கிவிட்டு பணம் தராமல் அங்குள்ள ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை கேள்விப்பட்டு

அங்கு வந்த செல்வத்திடமும் மர்ம கும்பல் தகராறு செய்து அவரை தாக்கியும்,ஊழியர் ஒருவரின் தலைமையில் பீர் பாட்டிலால் மண்டையை

உடைத்து தாக்கி விட்டு அங்கு உள்ள பழங்களை சாலையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

 

இது தொடர்பாக உடனடியாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் போலீசார் அங்கு வந்து தகராறு செய்து சென்ற மர்ம கும்பலை பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் செல்வத்தை தாக்கிய மர்ம கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

 

தொடர்ந்து இன்று காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் காந்தி மார்க்கெட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஷபி அகமது, துணை பொருளாளர் சுதாகர் மற்றும் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன், வியாபாரிகள் எஸ்.கே.டி பாண்டியன் மல்லி சேகர், பிரபாகரன் விஜயகுமார், மோகன் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் அங்கு திரண்டு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தனர்,

இதை அடுத்து காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர் சந்துரு உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரியை தாக்கிய மர்ம கும்பலை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்ததை கைவிட்டு சென்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறும் பொழுது திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்த விஷயத்தில் காவல்துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வியாபாரியை தாக்கிய மர்ம ஆசாமிகளை கைது செய்ய வேண்டும். மேலும் காந்தி மார்க்கெட் பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளை இரவு நேரத்தில் இயங்க விடாமல் தடுக்க வேண்டும் என்று கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.