திருச்சியில் லாட்டரி சீட்டுகள் கஞ்சா விற்றதாக
5 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பாலக்கரை பகுதிகளில் சோதனை நடத்தி அப்பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் ஜோசப் ( வயது 23 ) என்ற வாலிபரை கைது செய்தனர்.
இதேபோல் பாலக்கரை ஆலம் தெரு ஜங்ஷன் அருகே கஞ்சா விற்ற பாலக்கரை சந்தியாகப்பர் கோயில் தெருவை சேர்ந்த ராபர்ட் பிரின்சிலி ( வயது 27 ) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று குட்செட் சாலை அருகே கஞ்சா விற்ற பாலக்கரை காஜா பேட்டை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 20 )என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட், புத்தூர் அரசு மருத்துவமனை பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் அதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.-

