மும்பை எண்டர்டெயின்மெண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் ஆப் இந்தியா 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா மும்பை கல்யாணில் நடைபெற்றது . இக்குறும்பட போட்டியில் மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ் விஸ்வா நாராயன் இன்ஜினியர் . செந்தில்குமார் ஆகியோர் தயாரிப்பில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற குறும்பட இயக்குனரும் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான திருச்சியை சேர்ந்த ஆர்.ஏ.தாமஸ் இயக்கத்தில் உருவான பெண் குழந்தை தொழிலாளர் மற்றும் பெண் குழந்தை கல்வி குறித்து எடுக்கப்பட்ட கனவு தமிழ் குறும்படம் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றது .
மும்பை கல்யாணில் உள்ள C. M. காந்தி ஆடிடோரியம் கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ப்ல்ம் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் துணை தலைவர் மெகராஜ் ராஜா போஸ்லே மும்பை பாலிவுட் திரைவுலகை சேர்ந்த இயக்குனர் ப்ரஜ்வாலன் கலை இயக்குனர் உல்ஷன்நந்திரே வழக்கறிஞர் மனோஜ் தாதா மற்றும் பாலிவுட் திரைப்படத்துறையை சேர்ந்த ஒளிப்பதிவாளர் பரூக் கான் பாடலாசிரியர் ராம் பிரசாத் நடிகைகள் யாஸ்மின் சேஷக் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குறும் படங்களுக்கு விருதுகளை வழங்கினர் தேசிய அளவில் தமிழ்நாடு கேரளா ஒடிசா ஆந்திரா குஜராத் மஹாராஷ்டிரா டெல்லி பஞ்சாப் கர்நாடக மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஸ்பெயின் பிரான்ஸ் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அமெரிக்கா பிலிப்பைன்ஸ் மலேசிய இலங்கை சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 400 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டனர். சிறந்த இயக்குனருக்கான விருதினை கனவு குறும்படத்தின் இயக்குனர் திருச்சியை சேர்ந்த ஆர். ஏ. தாமஸ் மற்றும் மைக்கேல் ஆரோன் விக்னேஷ் இயன் அலெக்ஸ் உள்ளிட்ட பட குழுவினருடன் பெற்று கொண்டார்.