திருச்சி நவல்பட்டு அருகே
எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவர் திடீர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
நவல்பட்டு போலீஸ் விசாரணை
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் ( வயது 53 ) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர் சமீபத்தில் ஊர் திரும்பினார்.
இவருக்கு ராஜேஷ்வர் (வயது 23 )என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதில் ராஜேஸ்வர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டாவது மகள் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார் இன்னொரு மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக ராஜேஷ்வர் கல்லூரிக்கு செல்லாமல் ஊரில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது, தனக்கு சரியாக படிப்பு வரவில்லை என கூறியுள்ளார். மேலும் படிப்பை பாதியில் நிறுத்தியதால் அவரது பெற்றோர்கள் திட்டியுள்ளனர் இதனால் ராஜேஸ்வர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.
இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மாடி படிக்கட்டில் தந்தையின் வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . மகன் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின்னர் இது குறித்து கண்ணன் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார், புகாரின் அடிப்படையில் நவல்பட்டு காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ராஜேஸ்வர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை அதிகாரியிடம் கேட்டபோது, ராஜேஷ்வர் சரியாக படிப்பு வராத காரணத்தினால் இந்த துயர முடிவை எடுத்துள்ளார்.
வேறு எந்த காரணமும் இல்லை. காதல் பிரச்சனை ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
தனியார் மருத்துவக் கல்லூரி
எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவன் திடீரென தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.