திருச்சி கோட்டை பகுதியில்
கஞ்சா,போதை மாத்திரைகளுடன் 2.பேர் கைது .
திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையம் சாலையில் பேட்மிட்டன் மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி மதுவிலக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாதரிசி ஸ்டெல்லா மேரி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்க வைத்திருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது திருச்சி ஜீவா நகர் சேர்ந்த சாகுல் அகமது (வயது 36) சென்னை திருவில்லிக்
கேணி பகுதியை சேர்ந்த முகமது உசேன் (வயது 31) ஆகிய இரண்டு பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து உள்ளனர்.