மெத்தனால், எத்தனாலை சட்டவிரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவுப்படி, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் திருச்சி, தில்லை நகா் பகுதிகளில் செயல்படும் வேதியியல் மற்றும் அறுவைச் சிகிச்சை பொருள் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அந்நிறுவனங்களில் மெத்தனால் மற்றும் எத்தனால் பொருள்கள் சட்டவிரோதமாக விற்கப்படுகிா, மெத்தனால் இருப்பு ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்நிறுவன உரிமையாளா்களிடம் மெத்தனால் மற்றும் எத்தனாலை சட்டவிரோதமாக விற்போா் மற்றும் பயன்படுத்துவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனா். உரிய உரிமம் பெற்ற பிறகே வேதிப் பொருள்களை விற்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.