
திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் பரிதாப சாவு.
திருச்சி செம்பட்டு என் எம் டி காலனி சேர்ந்தவர் வேதமணி (வயது 65) இவர் நேற்று புதுக்கோட்டை – திருச்சி சாலையில்
திருவளர்ச்சி பட்டி ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே ஒரு வாலிபர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து வேதமணி மீது மோதியது. இந்த விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த வேதமணி ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வேதமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

