அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் இன்று டிஐஜி வருண்குமார் ஆஜர். இன்றும் சீமான் ஆஜராகவில்லை .
வழக்கு அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர்.
அக்கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமானும், வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் கடந்த மாதம் 8-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக
வேண்டுமென நீதிபதி விஜயா உத்தரவிட்டி
ருந்தார்.உத்தரவின் அடிப்படையில் சீமான் 8-ந் தேதி ஆஜரானார்.
அதேபோல வழக்கை தாக்கல் செய்த டிஐஜி வருண் குமாரும் ஆஜரானார்.
வழக்கு குறித்த
ஆவணங்களை சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த ஆவணங்கள் சீமான் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு அதாவது
இன்றைக்கு
ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்காக
இன்று
சீமான்
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சீமான் ஆஜராகவில்லை.
குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல், நீதிபதி விஜயா முன்பு, டிஐஜி வருண்குமார் தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணா வுடன் இன்று ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணை மே 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது, மே 8-ந் தேதி நடைபெறும் வழக்கம் விசாரணையின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த ஏப்ரல் 8 – ந் தேதி சீமான் ஆஜரானபோது, பெரும்பாலான கார்களில் வந்த நாம்தமிழர் கட்சியினர் டிஐஜி காரின் அருகே காரை நிறுத்திவிட்டு, சீமான் வாழ்க என கோசமிட்டும் ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு என எனக்கேட்டு மிரட்டல்விடுத்ததாகவும், இதுதொடர்பாக டிஐஜி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
மணப்பாறை காவல் நிலையத்தில் பெரியார் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக ஜனவரி ஒன்பதாம் தேதி வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று 28-ந் தேதி சீமான்மீது காவல்நிலையம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில், விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.