திருச்சியில் கருமாதி வீட்டில் 15 பவுன் நகை, பொருட்கள் திருட்டு. வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விசாரணை .
திருச்சியில் கருமாதி வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு
கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை
திருச்சி என் எம் கே காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51) இவர் ஜதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த வீட்டில் தாயார் விமலா மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த மார்ச் 8 ந்தேதி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது 30 ம் நாள் சடங்கு கடந்த ஏப்ரல் 6ந் தேதி நடைபெற்றது.
அப்பொழுது
சீனிவாசன் மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணம், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போய்விட்டது.
இது தொடர்பாக சீனிவாசன் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் வேலை பார்த்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.