Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல்களை கள்ள சந்தையில் விற்று தினம் பல லட்சம் கல்லா கட்டும் அதிகாரிகள்.

0

'- Advertisement -

கள்ள சந்தையில் கலர் நூல் . நுகர்பொருள் வணிப கழகம். கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா ?

 

திருச்சி மாவட்ட நுகர்பொருள் வணிப கழக குடோன்களில் நடக்கும் ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல் கண்டுகள் மற்றும் மிஷின்கள் விற்று கல்லாக்கட்டும் நபர்கள் :

 

திருச்சி மாவட்டத்தில் நுகர்ப்பொருள் வணிபக் கழக குடோன்கள் சமயபுரம் பகுதியில் உள்ள குணலை , அதவத்தூர் , மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய இடங்களில் உள்ள குடோன்களில் இருந்து திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளுக்கு பொது மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்க பட்டு வருகிறது .

ரேஷன் கடைகளுக்கு அனுப்ப குடோனில்  இருந்த சாக்குகளில் அரிசியை நிரப்பி எடையிட்டு பின்னர் கருப்பு, மஞ்சள், பிங்க், சிகப்பு , வெள்ளை என ஐந்து கலர்களில் நூல்கள் தைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது . ரேஷன் கடைகளில் உள்ள அரிசி மூட்டைகளில்  போன மாதம் பிள்ளை இருப்பு தெரிந்து கொள்வதற்காக  ஒவ்வொரு முறையும் கலர்கள் மாற்றி ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

இந்த நூல் கண்டுகள் தமிழக அரசால் ஒரு நூல் கண்டு ரூ.65 க்கு கொள்முதல் செய்யப் படுகிறதாம்.

ஒரு நூல் கண்டில் ஏறக்குறைய 400 மூட்டைகள் தைக்க வேண்டும் . ஆனால் 300 மூட்டைதான் தைக்க முடியும் என கணக்குக் காட்டி அந்தந்த குடோன் நிர்வாக அதிகாரிகள் முறைகேடாக கலர் நூல் கண்டை வெளி மார்க்கெட்டில் ரூ 35க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

 

இப்படி முறைகேடாக சுருட்டிய நூல்கண்டுகளை திருச்சி பாலக்கரை , மற்றும் பீமநகர் பகுதிகளில் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இது மட்டும் இல்லாமல் மூட்டைகளை தைக்க பயன்படுத்தும் மெஷின்கள் பழுதடைந்து விட்டது எனக்கூறி புதிய மெஷின்களை வாங்கியதாக கணக்கு காட்டி பழைய விஷயங்களை சரி செய்து புதிய மிஷின் களையும் கள்ள சந்தையில் விற்று வருகிறார்களாம் குடோன் நிர்வாக அதிகாரிகள் . தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை இத்தகைய முறைகேடுகளில் இந்த அதிகாரிகள் கல்லா கட்டி வருகிறார்கள் என கூறப்படுகிறது .

 

இந்த முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் அந்தந்த குடோன் நிர்வாக அதிகாரிகளை திருச்சி மாவட்ட கலெக்டர், கூட்டுறவு சொசைட்டி ஜே.ஆர் மற்றும் கூட்டுறவு சொசைட்டி விஜிலன்ஸ் அதிகாரிகள் முறையான வழியில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நேர்மையான சில கூட்டுறவு அதிகாரிகளின் எதிர்பார்ப்பு ஆகும் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.