Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியது போல் ஸ்ரீரங்கத்திலும் உயிர்ப்பலி ஏற்படுமா ? அச்சத்தில் பொதுமக்கள்.

0

'- Advertisement -

நேற்று ஸ்ரீரங்கம் குடியிருப்பு வாசிகள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர் , அதில் அவர்கள் கூறியிருந்ததாவது :-

 

இது உங்களுக்கே நியாயமா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகளே…..

சிந்திப்பீர்.

தற்போது ஸ்ரீரங்கம் அரங்கனின் திருத்தேர் உற்சவம் நாளை 26-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் உறவினர்கள் கூட்டம் வரத்தொடங்கி விட்டது. ஆங்காங்கே உள்ள உபயதாரர்கள் தோப்பில் இன்றே ( வெள்ளிக்கிழமை) 25-ந் தேதி காலையே வெளியூர் மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.

இந்த சூழ்நிலையில் இத்தனை நாள் இருந்து இந்த தேதிகளில் திருவிழா நடைபெறப்போகிறது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் வந்து குவிய தொடங்க போகிறார்கள் என்று தெரிந்தும் திருச்சி மாநகராட்சியினர் ஸ்ரீரங்கம் பகுதிகளில் இன்று காலை விநியோகிக்கப்பட்ட குடிநீரில் முழுவதும் செம்மண் கலரில் வந்து கொண்டிருக்கிறது.பல இடங்களில் குடிநீரே வரவில்லை. தூய்மையான குடிநீரே தற்பொழுது ஸ்ரீரங்ம் பகுதி முழுவதும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

இது சம்பந்தமாக காலையில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட பொழுது ஸ்ரீரங்கம் பகுதியில் குடிதண்ணீர் சப்ளை செய்யும் கொள்ளிடத்தில் உள்ள குடிநீர் சப்ளை செய்யும் குடிநீர் தொட்டி தூர்வாரப்பட்டு தற்பொழுதுதான் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்றும் , எனவே அதிலிருந்து அழுக்கு நீர் தான் தற்போது வெளியேற்றப்படுகிறது. அது மீண்டும் சுத்தமாகி ஊற்று நீர் ஊறி நல்ல நீராக சரியாகி வருவதற்கு ஒரு நாள் ஆகும் என சப்பை கட்டு கட்டுகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் அரங்கனின் சித்திரை தேர் திருவிழா முன்பே திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது என்பதை திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியுமா தெரியாதா இந்த நாளில் தான் குடிநீர் சப்ளை செய்யும் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமா? இப்பொழுதுதான் இதற்கு டைம் கிடைத்ததா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும் அந்தந்த துறை அதிகாரிகளுக்கும் எடுத்து சொல்வதற்கு நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற மக்கள் பிரச்சனைகளுக்கு அடிமட்டத்தில் உள்ள நமக்கு யாரும் வந்து உதவப் போவதில்லை என்பதே நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும். இதற்கு யார் தான் பொறுப்பு ஏற்பது?

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமாவது சுதாரித்துக் கொண்டு கோவில் ரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் உள்ளூர் பக்தர்களுக்கும் தூய்மையான குடிநீர் உடனடியாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே ஸ்ரீரங்கம் மக்களின் சார்பாக ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் தாழ்மையான வேண்டுகோளாகும்.

இதனை செவிமடுத்து உடனடி நடவடிக்கையில் இறங்குவார்களா ?சம்பந்தபட்ட அதிகாரிகள் …. அல்லது ஸ்ரீரங்கத்திலும் குடிநீர் – விநியோகத்தில் உறையூரை போன்ற சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை காத்திருந்து பார்ப்போம் என கூறி இருந்தனர் .

 

இந்த நிலையில் இன்று ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது .

 

தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் மதியம் வரை ஸ்ரீரங்கம் முழுவதும் ஆங்காங்கே திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நீர்மோர் , பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

திருச்சி உறையூரில் நான்கு பேர் உயிர் இழந்ததற்கு காரணம் கழிவு நீர் கலந்து வந்த குடிநீர் அல்ல குழுமாயி அம்மன் கோயில் , உக்கிரக காளியம்மன் கோயில் , உறையூர் வெக்காளியம்மன் ஆகிய கோயில்களில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட நீர் மோர், பானகம் அன்னதானம் போன்றவற்றை சாப்பிட்டதால்தான் உயிர் இழந்தார்களே தவிர குடிநீரால் அல்ல என்ற வினோதமான விளக்கம் அளித்திருந்தார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் .

 

இன்று ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட ( இரண்டு நாட்களாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவனைக்கோயில் பகுதியில் குடிநீர் கலங்களாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ) நீர்மோர் , பானகம் அருந்திய ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இப்பகுதியிலும் உயிரிழப்பு ஏற்படுமா என அச்சத்தில் உள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.