Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது.

0

'- Advertisement -

போலீசாரின் அதிரடி வேட்டையில்

 

திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது.

 

திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் அரியமங்கலத்தை சேர்ந்தவர்களான சண்முக பிரியன் ( வயது 20), ரியாஸ் அஹமத் ( வயது 24), விஷால் கிருஷ்ணா ( வயது 20), இப்ராஹிம் மூசா ( வயது 21) மற்றும் ரவுடிகள் தீபக் (வயது 20), உதுமன் அலி ( வயது 22) ஆகியோர் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து 105 போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

இதே போன்று பாலக்கரை எடதெருவில் பாய்கடை சந்து பொது சுகாதார வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலத்தை சேர்ந்த அசார் முகமது ( வயது 27) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.