3 ஆண்களுடன் மாறி மாறி உல்லாசம். இடையூறாக அழுத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள். கொடூர கொலைக்கு பின் மீண்டும் உடலுறவு. 4 பேரும் கைது
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே திருமணம் கடந்த உறவுக்கு தடையாக இருந்த இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சிறுமியின் தாய் கொலை சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை என்றும், கொலை செய்த கள்ளக்காதலர்களும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிருந்தாவுக்கு 27 வயது ஆகிறது. அவருக்கும் திசையன்விளை அருகே துவரம்பாடு கிராமத்தைச் சேர்ந்த சரத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வேறு வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பிரச்சனை வந்து உள்ளதால் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து சரத் கோவைக்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பிருந்தா தனது பெண் குழந்தையுடன் மகாதேவன் குளத்தில் வசித்து வந்திருக்கிறார். பிருந்தாவின் பெற்றோர் தூத்துக்குடியில் வசிக்கிறார்களாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் இருந்த தர்ஷினியை தூக்கிக்கொண்டு நடுவக்குறிச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற பிருந்தா குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறினார்.
ஆனால் தர்ஷினியின் கன்னம், உதடு, காது மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் வந்தது. தொடர்ந்து திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு தர்ஷினியை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இதை அடுத்து பிருந்தாவிடம் போலீசார் விசாரித்த போது பழைய டேப் ரெக்கார்டர் போல’ கட்டில் இருந்து விழுந்து விட்டார்’ என ஒரே மாதிரி பிருந்தா கூறி இருக்கிறார். போலீசார் துருவி துருவி விசாரித்த போது சிறுமி கொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோவையில் சரத் வேலை பார்க்கும் நிலையில் பிருந்தாவுக்கு பல ஆண்களுடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி துவரம்பாடு பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்தும் லிங்க செல்வன், (வயது 29) முத்துசுடர் (வயது 28) ஆகியோர் மது போதையில் பிருந்தாவை வீட்டுக்கு சென்று அழைத்து துவரம்பாடு வாழைத்தோட்டம் பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது மகளையும் பிருந்தா அழைத்துச் சென்றிருக்கிறார். ஏற்கனவே அங்கு பெஞ்சமின் (வயது 25) என்ற நபரும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
பிருந்தா, முத்துச்சுடர் மற்ற இருவர்களுடனும் மாறி மாறி உல்லாசமாக இருந்துள்ளார் . அப்போது குழந்தை தொடர்ந்து தாயை காணாமலும், பசியாலும் அழுததாக கூறப்படுகிறது. குழந்தையை ஐஸ் கம்பெனியில் மாடிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மதுவை கலந்து குழந்தைக்கு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
ஆனாலும் தாய் வராததால் தர்ஷினி அழுது கொண்டிருந்திருக்கிறார்.
அப்போதும் அழுததால் குழந்தை உல்லாசமாக இருக்க இடையூறாக இருக்கும் என நினைத்து குழந்தையின் வாயை பொத்தியுள்ளனர் .
இதில் சிறுமி மயங்கியதாக கூறப்படுகிறது. லிங்க செல்வனுக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கடையில் குழந்தையை படுக்க வைத்தனர் .
அதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் பிருந்தாவுடன் உல்லாசமாக இருந்த நிலையில்
அதிகாலை 3 மணிக்கு பிருந்தாவிடம் குழந்தை தூங்கி விட்டதாக கூறி கொடுத்து இருக்கிறார்கள். வீட்டுக்கு சென்ற பிறகும் பிருந்தா தனது மகள் தர்ஷினி மூச்சுப்பேச்சு இல்லாமல் இருப்பதால் அச்சமடைந்து என்ன செய்வது என்ன தெரியாமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றதும், அதற்கு பிறகு மருத்துவமனையில் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது.
தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை கொன்ற லிங்கச்செல்வன், பெஞ்சமின், முத்துசுடர், பிருந்தா ஆகியோரை கைது செய்துள்ளனர்.
தீவிர விசாரணைக்கு பிறகு பிருந்தா திருநெல்வேலி கொக்கிரகுளம் மகளிர் கிளை சிறையிலும் மற்ற மூவரும் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காமத்தால் தனது குழந்தை கொன்று நாடகமாடிய தாயால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .