திருச்சி கேகே நகரில் அமெரிக்கா சென்ற நபரின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
திருச்சி கே.கே. நகர், ஐயப்பன் நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் திருநாராயணன் இவர் கடந்த 7ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். வீட்டின் சாவியை உறவினர் வச்சலா என்பவரிடம் கொடுத்து விட்டு சென்று இருந்தார் .
இந்த நிலையில்

நேற்று வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து பிரோவில் இருந்த 550 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி கொண்டு சென்று விட்டனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் வச்சலாவுக்கு தகவல் தெரிவித்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக
திருநாராயணன் உறவினர் வச்சலா கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.