திருச்சியில் மது அருந்த மனைவி பணம் தராத விரக்தியில் மரத்தில் காவலாளி தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் கே.கே.நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். குடிபழகத்திற்கு அடிமையானவர். கடந்த ஏப் 18ந் தேதி மதுகுடிக்க தன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வேலைக்கு சென்ற ராஜா மது அருந்த பணம் இல்லாத விரக்தியில் அங்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.