திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதாட்டியிடம் இரண்டு பவுன் நகை திருடிய
பெண் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி மாரியம்மன் கோவில் சேத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70) இவர் நேற்று திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த திருச்சி குழுமணி ரோடு பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மனைவி தங்கம்மாள் (வயது 55) என்பவர் கன்னியம்மாள் அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்கம்மாளை பிடித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கம்மாள்யை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.