இன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் .
இன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
மாநிலத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் முக்கிய முடிவு.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று நடந்தது.கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்
விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான இரண்டு மடங்கு இலாபகரமான விலையை விவசாய விளைபொருட்களுக்கு வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, தனிநபர் இன்சூரன்ஸ், வங்கியில் நகையை அடகு வைத்தால் இறுதியில் வட்டியை மட்டும் கட்டி திருப்பி வைத்து கொள்ளும் வசதி, 60 வயது அடைந்த அனைவருக்கும் மாதம் ரூ.5,000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்றவற்றை ஏற்று கொள்ளாத அரசியல் கட்சிக்கு ஓட்டுபோட கூடாது என்பது – சம்பந்தமாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கொள்ளும் கட்சிகளுக்கு வாக்களிப்பது சம்பந்தமாகவும் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் அனைவரையும் அழைத்து பேசி விவாதித்து ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி சென்று போராடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
டெல்லியில் நடக்கும் போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.