திருச்சி திருவெள்ளறையில் அஞ்சல் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயண நிகழ்ச்சி
பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பறைசாற்றும் வகையில் நடந்தது.

உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 18 – ந் தேதி கொண்டாடப்படுகிறது இந்த உலக பாரம்பரிய நாளினை ஒட்டி திருச்சி மத்திய அஞ்சல் மண்டலம் சார்பில் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பறைசாற்றும் வகையில் அஞ்சல் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயண ‘ நிகழ்ச்சி திருவெள்ளறையில் நடைபெற்றது. இதனை ஒட்டி நடைபயணமானது ஸ்வஸ்திக் குலத்தில் ஆரம்பித்து திருவெள்ளரையில் உள்ள புண்டரிகாக்ஷன் பெருமாள் கோவில் மற்றும் வட ஜம்புநாதர் கோவில் வரை நடைபெற்றது. அதில் ஸ்வஸ்திக் குலத்தின் வரலாறு மற்றும் அதன் சிறப்பும் புண்டரிகாக்ஷன் பெருமாள் கோவிலின் தொன்மை அதன் சிறப்பும் மற்றும் அங்குள்ள கல்வெட்டுக்கள் பற்றி வந்திருந்த அனைத்து ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தொல்லியல் துறையில் இருந்து காளீஸ்வரன் மற்றும் சோழமண்டல வரலாறு தேடல் குழுவின் தலைவர் உதயசங்கர் அனைத்து அஞ்சல் அலுவலர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமையில் மண்டல உதவி இயக்குனர்கள், முதுநிலை கண்காணிப்பாளர் திருச்சி கோட்டம், முதுநிலை கண்காணிப்பாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மண்டல அலுவலர்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.