இன்று திருச்சி மாவட்டம் அண்ணாநகர் போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே வசித்து வரும் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சூர்ய கலா மற்றும் அவரது தகப்பனார் பார்த்திபன் ஆகியோர் இணைந்து பணம் தேவை இருக்கும் பெரிய முதலாளிகளிடம் தொடர்பு கொண்டு லோன் பெற்று தருவதாக கூறி பலரிடம் ஏமாற்றி இன்சூரன்ஸ் செலுத்த வேண்டுமென்று கூறி பல கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திருச்சி மாவட்டம் பொருளாதார குற்ற பிரிவில் காவல்துறையில் இந்திய மக்கள் பன்னோக்கு முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று புகார் அளிக்கப்பட்டது
அந்த புகாரில் ஏமாற்ற பட்டவர்களின் விவரமும் போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்து மேலும் பல குடும்பங்களை அவர்களிடம் ஏமாறாமல் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சூரியகலா – வெங்கடேஷ்
அசோக்:

இதில் தொடர்புடையவர்கள் சென்னையை சேர்ந்த அசோக் தன்னை பைனான்சியர் என அறிமுகபடுத்தி கொண்டவர்.
வெங்கடேஷ் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக தன்னை அறிமுகப்படுத்தி 10 கோடி வரை ஏமாற்றியவர்
சூர்யகலா இவர் வெங்கடேஷின் மனைவி இவருடைய வங்கி கணக்கில் தான் பணம் வாங்கி ஏமாற்றியவர்
பார்த்திபன் இவர் வெங்கடேஷின் தகப்பனார், இவர் பணம் வாங்க செல்லும் இடமெல்லாம் அருகே நின்று பொய் சொல்லி ஏமாற்ற தூண்டியவர்
இந்த பிரச்சினையை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜெபி மற்றும் இந்திய மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் சதீஷ் குமார் ஆகியோர் தலைமையில் இன்று திருச்சி மாநகர குற்றப்பிரிவில் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்ப்ட்டுள்ளது