திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி.
திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாள் ஏப்ரல் திங்கள் 14-ந் தேதி சமத்துவ நாளாக கொண்டாடபடுவதையொட்டி அன்றைய தினம் விடுமுறை என்பதால் இன்று சமத்துவ நாள் உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் .முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர் ராமநாதன் (பணியாளர் மற்றும் சட்டம் ),மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.