Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாஸ்மாக் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று டாஸ்மாக் தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு போராட்டம்

0

'- Advertisement -

திருச்சியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

டாஸ்மாக் தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு போராட்டம்

 

Suresh

கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது .

 

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு,பணி நிரவல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ,டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும், டாஸ்மாக் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் நிர்வாகம் புதிய முடிவுகளை எடுக்கும்போது தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும், டாஸ்மாக்கில் புதிய பணியாளர் தேர்வு செய்யப்பட்டால் இறந்த பணியாளர்களின் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும், காலி மதுபான பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை தனி ஒரு முகமை மூலம் செயல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடை சமூக பாதுகாப்பு கருதி இரவு பணி நேரத்தை இரண்டு மணி நேரம் குறைக்க வேண்டும், கேரள மாநிலத்தை போல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும், மதுபானங்கள் ஸ்கேனிங் முறை விற்பனையில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடந்தது. திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜா முகமது, நாம் தமிழர் கட்சி பெல் தொழிற்சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முசிறி ராஜா,மணப்பாறை செல்வன், அண்ணாதுரை, லால்குடி பெருமாள், துறையூர் அன்பழகன், சமயபுரம் சுப்பிரமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.